சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்ட மர்ம நபர், நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விஜய் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்ததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சபீக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யபட்ட நபர் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல் மாஸ்டராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
















