இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்துப் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
ஒடிஷாவில் முதல்கட்ட படிப்பிடிப்பும் அடுத்ததாக, ஹைதராபாத்திலும் நிறைவடைந்த படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு வாரணாசியெனப் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















