ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது என் கையில் இல்லை என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
ஆனால், இந்தத் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை. இதுகுறித்து பேசிய ஷமி, தேர்வு செய்வது என்னுடைய கைகளில் இல்லை, தேர்வு செய்வது தேர்வுக் குழு, பயிற்சியாளர், கேப்டனின் வேலை என விளக்கமளித்துள்ளார்.