காசாவில் போர் நிறுத்தம் மூலம் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த அமைதி திட்டத்தின் முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த முயற்சிக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக டிரம்பை தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தொலைபேசி உரையாடலின்போது இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாட்களிலும் நெருங்கிய தொடர்பில் இருக்க விரும்புவதாக அதிபர் டிரம்பிடம் கூறியதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.