ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார். அவர் 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎல் தொடரில் விளையாடுகிறார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.