ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தோல்வியடைந்தன.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவராக உர்சுலா வான் டெர் லேயர் 2வது முறையாகப் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து தீவிர இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகள் சார்பில், உர்சுலா வான் டெர் லேயனுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
இதில் தீவிர வலதுசாரி கட்சியினர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 179 பேரும், இடதுசாரி தீர்மானத்துக்கு ஆதரவாக 133 பேரும் வாக்களித்தனர்.
ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற 361 வாக்குகளை பெற வேண்டும். இதனால் உர்சுலாவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.