ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து நான்காயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து ஆயிரத்து 290 கன அடியில் இருந்து நான்காயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.