சைவ பாடிபில்டர் என்று அழைக்கப்பட்ட பஞ்சாப் நடிகர் வரிந்தர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருதாஸ்பூரை சேர்ந்த வரிந்தர் குமான், பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்டிருந்தார். கட்டுமஸ்தான உடல் மூலம் ரசிகர் பட்டாளத்தைபெற்ற அவர், 2009 ஆம் ஆண்டில் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றார்.
அத்துடன் மிஸ்டர் ஆசியா போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்து அசத்தினார். சைவ பாடிபில்டர் என்று அழைக்கப்பட்ட வரிந்தர் குமான், டைகர் 3, மர்ஜாவன் கபடி ஒன்ஸ் அகெய்ன் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் 42 வயதான அவருக்குத் திடீரெனத் தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அமிர்தரஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரிந்தர், மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.