இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படுவதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2020ல் கொரோனா பரவலின்போது சீனாவுடனான விமான சேவை நிறுத்தப்பட்டது. அதே ஆண்டில் கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து இரு நாட்டு உறவுகளும் மோசமடைந்தன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால், இந்தியா – சீனா உறவுகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.
அந்த வகையில், வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் இரு நாடுகள் இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவது இரு நாட்டு உறவை மேம்படுத்துவதில் மிகவும் சாதகமான முன்னேற்றமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.