காஸாவில் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை மக்கள் கொண்டாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அக்டோபர் 2023 இல் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 2 வருடங்கள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் -இன் முயற்சியால் முடிவுக்கு வர உள்ளது. பணய கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட 20 அம்ச அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பும் , இஸ்ரேலும் ஏற்றுக்கொண்டுள்ளன.
இதனையடுத்து போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சில பகுதிகளில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்த போதிலும், காசாவின் பல்வேறு பகுதிகளில் போர் நிறுத்தத்திற்கான கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.