மின் உற்பத்தி நிலையங்கள்மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைனின் கியூவ் நகரம் இருளில் மூழ்கியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையும் பயனற்று போன நிலையில் இருநாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் உக்ரைனின் கியூவ் நகரத்தைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது.
நீர் மின் மற்றும் அனல் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கியூவ் நகரம் இருளில் மூழ்கியது.
இதேபோல் கியூவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரஷ்ய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.