இந்தியாவுடனான உறவை சரிசெய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு எம்.பிக்கள் 21 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேபோரா ராஸ் மற்றும் ரோ கண்ணா தலைமையிலான அமெரிக்க எம்பிக்கள் 21 பேர், அதிபர் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், சீனாவுடன், இந்தியா நெருங்கி வருவதால் அந்நாடு மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை திரும்ப பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவுடனான உறவை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.