“கோல்ட்ரிப்” இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் “ஸ்ரீசன் பார்மா” என்ற நிறுவனம் “கோல்ட்ரிப்” இருமல் மருந்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் இந்த மருந்தை உட்கொண்ட 21 குழந்தைகள் உயிரிழந்தன. இந்தநிலையில் குழந்தைகள் பலியான சம்பவத்தை மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி கவாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்விகாரத்தில் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேச அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விசாரணை நடைபெற்று வருவதால் மாநில அரசுகளை நம்பாமல் இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். இதை ஏற்ற நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.