நல்லெண்ணத்தின் அடையாளமாக ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கி இந்தியா உதவி செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி ஒரு வாரக் கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அமீர் கான் முத்தகி சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதில் ஐந்து ஆம்புலன்ஸ்களை முத்தகியிடம் நேரடியாக ஒப்படைத்தார்.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதாகவும் முத்தகியிடம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.