திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாத தொடங்கியது முதலே பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் புரட்டாசி மாதத்தின் 4வது சனிக்கிழமை என்பதாலும் வாரவிடுமுறை என்பதாலும் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருக்கின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 3 கோடியே 39 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.