சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், முறைத்ததால் அடித்தோம், ஆனால் சீராக அடிக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், தான் ஏன் தாக்குதலை தடுக்கவில்லை என்று சிலர் கேட்பதாகவும், முறைத்ததால் அடித்தோம் ஆனால் சீராக அடிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என்று நினைப்பதாகவும், முதலமைச்சராவது தமக்கு பெரிதல்ல, தமது அரசியல் களம் வேறு, அதிகார களம் வேறு எனவும் கூறினார். நடிகர் பின்னால் செல்பவர்கள் விசிக நிர்வாகிகள் அல்ல எனவும் விஜய்யை மறைமுகமாக சாடினார்.