கோவை பி.என்.புதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் விவகாரம், கிட்னி திருட்டு விவகாரம் போன்றவற்றில் திமுக அரசுக்கு நீதிமன்றம் சவுக்கடி பதில் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.