தமிழகத்தில் முதல்முறையாக உதகை மரவியல் பூங்கா வளாகத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ப்பு பிராணியான நாய்களுக்கான பராமரிப்பு பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உதகையில் நாய்கள் வளர்ப்பவர்கள் அவற்றைத் தனியாக நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வதற்காக நாய்களுக்காகப் பிரத்யேக பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டது.
சிறுவர் பூங்கா போன்று, இங்கு வளர்ப்பு பிராணிகளான நாய்கள் விளையாடி மகிழ, புற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை, சிறு குளம், ஸ்பிரிங்லர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.