190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த “SWORD DRAGON” என்றழைக்கப்படும் கடல் உயிரினத்தின் எலும்புக்கூடு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.
டோர்செட் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு, இக்தியோசோர் இனத்தைச் சேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
“SWORD DRAGON” என அழைக்கப்படும் இந்தக் கடல் உயிரினம் சுமார் 3 மீட்டர் நீளமுடையது எனவும் மீன்களையும், நத்தைகளையும் உணவாக உட்கொண்டு வாழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய கண் குழி மற்றும் வாள் வடிவ மூக்கை உடைய இந்த எலும்புக்கூடு, இக்தியோசோர் இனத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய இணைப்பை வெளிக்கொண்டு வந்துள்ளதாக மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.