திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலையில் இரவு நேரத்தில் காட்டுயானைகள் கூட்டம் வாகனங்களை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகள் அவ்வப்போது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதும், விளைநிலங்களை சேதபடுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், கொடைக்கானலில் இருந்து தாண்டிகுடி ஜெரோனியம் செல்லும் சாலையில் உலா வந்த காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்து நின்றன.
இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைந்த நிலையில், யானை கூட்டங்களை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.