பாஜக ஒரு தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் கூட, ஆர்.எஸ்.எஸ் அடுத்த நாளே வழக்கம்போலத் தனது பணியை தொடரும் என ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நேர்காணலில், ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் பங்கேற்றார்.
அப்போது அமைப்பு கல்வி, தொழிலாளர் வளர்ச்சி, அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆர்.எஸ்.எஸ் தாக்கம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அரசுகளின் தடைகளை கடந்து ஆர்.எஸ்.எஸ் தனக்கான வழியில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்த சுனில் அம்பேகர், தன்னார்வ அடிப்படையிலான இந்த அமைப்பு சமூக ஒழுக்கம் மற்றும் சேவை நோக்குடன் எப்போது இயங்கும் என்றும் கூறினார்.