தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கக் கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாகத் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வழக்குச் சிறப்பு புலனாய்வு குழு மாற்றப்பட்டதால் மதியழகனிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 5 நாட்களுக்குப் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் 2 நாள் போலீஸ் காவல் கொடுத்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் 2 நாள் காவல் முடிந்ததால் மதியழகனை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதியழகனை திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.