எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உட்பட 90 பேருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கலைமாமணி விருதுகளை வழங்கினார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா தமிழக அரசின் சார்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பால சரஸ்வதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாரதியார் விருது முனைவர் முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது யேசுதாஸுக்கும்,
பாலசரசுவதி விருது முத்துகண்ணம்மாளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.