திமுக ஆட்சியில் தமிழக மக்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
துரை கைத்தறி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழக மக்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாள்தோறும் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், “பணம் மட்டுமே குறிக்கோளாக பார்க்கும் ஆட்சி வெகுவிரைவில் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடங்கியுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.