தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் சுற்று பயணத்தை மதுரையில் தொடங்கினார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான தொடக்க விழா மதுரை அண்ணாநகரில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.