திமுக ஆட்சி அகல இன்னும் 177 நாட்களே உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு தமிழக பாஜக முடிவுரை எழுதும் என்றார்.
ஆட்சி முடிவடையும் நிலையில் மகளிர் உதவித்தொகையை தருவோம் என கூறுகிறார் உதயநிதி என்றும், “திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வேங்கை வயல் விவகாரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வாய் திறக்கவில்லை என்றும், பாஜக – அதிமுக கூட்டணியே இயற்கையான கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சி நடத்தாமல் காட்சிகளையே நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும், காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த திமுக அரசு கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் சாடினார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 60%-ம், போக்சோ குற்றங்கள் 52%-ம் உயர்ந்துள்ளதாகவும், தமிழகத்தில் அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகம் போதை பொருட்களின் பிடியில் சிக்கியுள்ளது என்றும், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்துக்கு திமுக அரசே காரணம் என்றும் நயினார் குறிப்பிட்டார்.
கேட்ட இடத்தில் பரப்புரைக்கு அனுமதி அளித்திருந்தால் கரூர் நெரிசல் சம்பவம் நிகழ்ந்திருக்காது எனறும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.