தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடல் பகுதியில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது.
நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பட்டாசுகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தீவுத்திடல் பகுதியில் பட்டாசு விற்பனையாளர் சங்கம் சார்பில் 30 கடைகள் போடப்பட்டுள்ளன.
கடைகளை அமைத்து பட்டாசுகளை அடுக்கி வைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், பட்டாசு விற்பனையை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைக்கவுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு உத்தரவின்படி ஆபத்தான பட்டாசுகளை தவிர்த்து பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.