தனியார் கட்டுமான நிறுவனம்மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெரும்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் ஓசோன் கிரீன்ஸ் என்ற நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 20 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பைக் கட்ட ஆரம்பித்தது.
பணிகள் முடிவுபெற்று நிர்வாக மாற்றம் மற்றும் நிர்வாகக் குளறுபடியின் காரணமாக மின் இணைப்பு பெறாமல் 1000 அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு விற்பனை செய்துள்ளது.
இந்நிலையில் தனியார் கட்டுமான நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி குடியிருப்புவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.