அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது குழாயிலிருந்து எரிபொருள் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டல்லாஸ்- ஃபோர்ட் வொர்த் விமான நிலையத்தில் அமெரிக்க ஈகிள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த விமானத்தில் வழக்கம்போல் பராமரிப்பு பணியை மேற்கொண்ட ஊழியர், எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்தார். அப்போது ஊழியரின் கைகளின் பிடியில் இருந்து எரிபொருள் குழாய் நழுவியது.
விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் எரிபொருள் வெளியேறித் தேங்கியது.
துரிதமாகச் செயல்பட்ட விமான நிலைய ஊழியர்கள் எரிபொருள் குழாயின் இணைப்பைத் துண்டித்தனர். தொடர்ந்து எரிபொருள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.