இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!
Oct 17, 2026, 10:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Murugesan M by Murugesan M
Oct 13, 2025, 12:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வட இந்தியாவில் இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகச் சென்னையில் மருந்து நிறுவன உரிமையாளர் மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் குடித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தில் நச்சுத் தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள கோல்ட்ரிப் மருந்தைத் தயாரித்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மருந்துத் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அமலாத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள மருந்து நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்ணா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Tags: Incident where 21 children died after consuming medicine: Enforcement Department raids the company owner's house and officesவட இந்தியா
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்கா : டெக்சாஸ் மாகாணத்தில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது ஏற்பட்ட அசம்பாவிதம்!

Next Post

ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

Related News

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies