திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சியில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, சம்மந்தப்பட்ட நீதிபதியை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்ட தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தவெக நிர்வாகிகள், சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த காவலர்கள், தவெக நிர்வாகிகளை குண்டுகட்டாக கைது செய்தனர்.