திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செங்கத்தில் இருந்து போளூர் செல்லும் சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புதூர் மாரியம்மன் கோவில் முதல் புதுப்பாளையம் வரை செல்லும் மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையானது, குண்டும் குழியுமாகச் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் அவ்வப்போது விபத்தில் சிக்குவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும், சாலையை சீரமைத்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.