தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் விடிய விடியப் பெய்த கனமழை காரணமாக கொண்டமநாயக்கன்பட்டியிலிருந்து ஏத்தகோவில் செல்லும் ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் குளம்போலத் தேங்கியுள்ளது.
ரயில்வே சுரங்க பகுதியைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் போக்குவரத்து பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், 10 கிலோ மீட்டர் தூரம்வரை வாகன ஓட்டிகள் சுற்றி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சுரங்க பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.