ஆலங்குளம் அருகே சோலார் மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா மாறாந்தை ஊராட்சிக்குட்பட்ட கள்ளத்திகுளம் கிராமப் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.
சோலார் மின் உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கிராம மக்கள், தங்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காததால் ரேசன் அட்டை, ஆதார் அட்டைகளை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவனம் சார்பில் நடைபெறும் சோலார் மின்திட்டத்திற்காகப் பலல லட்சம் மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
மரங்கள் அழிக்கப்பட்டதால் வாழ்விடத்தை இழந்த வனவிலங்குகள், கிராமத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவருவதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், தமிழக ஆளுநரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அடையாள அட்டைகளின் நகல்களை அனுப்பி வைக்கும் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.