சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் தனியார் மண்டபத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
முன்னதாகப் பாரதமாதா திருவுருவப் படத்திற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர்கள் டாக்டர் கேசவ பலிராம ஹெக்டேவார், டாக்டர் குருஜி திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
ஆர்ஆர் நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் கோட்ட மக்கள் தொடர்புப் பொறுப்பாளர் கேசவராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.