அமிர்தசரஸில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு விரைவில் விமான போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காபூலுக்கும், டெல்லிக்கும் இடையே விமான சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். குறிப்பாகக் கனிமம், விவசாயம் மற்றும் விளையாட்டு துறைகளில் முதலீடு செய்ய இந்தியாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வாகா எல்லையைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததாகவும் அமீர்கான் முத்தாகி கூறினார்.