அமெரிக்கா சீனாவிற்கு உதவவே விரும்புகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இதனால் சீனப் பொருட்களின் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு மொத்தம் 130 சதவீதமாக அதிகரித்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், தன்னிச்சையான இரட்டை நிலைபாட்டை கடைபிடிக்கும் அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியது.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிபர் டிரம்ப், அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.