ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 9 -ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலிலும், அதன் தென்கிழக்கு பகுதியிலும் இரண்டு குண்டுகள் வீசப்பட்டன.
இது பாகிஸ்தானுடைய தாக்குதல் என்று அடுத்த நாளே ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறுவது ஆகும் என்றும் கூறியிருந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 25-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ நிலைகளை ஆப்கன் ராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
காபூல் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக தனது நாட்டின் எல்லையில் உள்ள பாகிஸ்தான் நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக, ஹெல்மண்ட், காந்தஹார், சாபுல், பாக்டிகா, பாக்டியா, கோஸ்ட், நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள பாகிஸ்தான் நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் படைகள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தின. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.