தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதெனத் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் அளித்த பேட்டியில்,
தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டது என்றும் தங்களுக்கு ஆதரவாக இருந்த யூ-டியூப், தவெக சமூக வலைதள நிர்வாகிகளைக் கைது செய்தனர் என்று அவர் கூறினார்.
கரூரில் மட்டும் காவல்துறை தங்களை வரவேற்றது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜூனா, ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போலக் காவல்துறையினர் தடியடி நடத்தினர் என்று அவர் குறிப்பிட்டார்.
மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்து தவெக-வை முடக்க திமுக முயற்சிக்கிறது என்றும் சம்பவம் நடைபெற்றபோது, காவல்துறை அதிகாரிகள்தான் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர் என்று ஆதவ் அர்ஜூனா கூறினார்.