கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட இருவரின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாகக் கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் 2நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்தநிலையில் வழக்கில் ஜாமின் கோரி இருவரும் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இருவரின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.