திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றை நீதிமன்றம் மூலம் மக்கள் முன்பு அம்பலப்படுத்த உள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கு விசாரணைக்காகச் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவர் அளித்த பேட்டியில்,
தனக்கு எதிராக டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் நானே குறுக்கு விசாரணை செய்ய உள்ளேன் என்றும் டி.ஆர்.பாலுவின் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றை நீதிமன்றம் மூலம் மக்கள் முன்பு வைக்க உள்ளோம் என்றும் நிச்சயம் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
நவம்பர் 11-ல் நானே ஆஜராகி திமுக பைல்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வாதாடுவேன் என்றும் ஊழல் பெருச்சாளிகள் கொள்ளை அடித்தை வெளிக்கொண்டு வருவதுதான் எங்கள் நோக்கம் என்று அண்ணாமலை கூறினார்.