கரூர் துயர சம்பவத்தில் தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கைச் சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விவரம் வெளியாகி உள்ளது.அதில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், தமிழக அரசு அமைத்த ஒருநபர் ஆணையம் , உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைத் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரக் கோப்புகளை சிபிஐ வசமிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆணையிட்டுள்ளது.
இந்த வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் அமைத்த மேற்பார்வைக் குழுவானது தனது முதல் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை விவர அறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி குழுவிடம் மாதந்தோறும் சமர்ப்பிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.