காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன் திரும்பியபோது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காகத் தன்னை பில் கிளிண்டன் பாராட்டியது மிகவும் நல்லது எனத் தெரிவித்தார்.
பில் கிளிண்டன் தனது நண்பராக இருந்தார் என்றும், தன்னுடைய திருமணத்திற்கு வந்தார் எனவும் டிரம்ப் கூறினார். 2016 தேர்தலில் தன்னை எதிர்த்து ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டபோதும் கிளிண்டனிடம் அன்பு காட்டியதாகக் குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடனான முந்தைய உறவுகளை டிரம்ப் நினைவு கூர்ந்தார்.