காரைக்குடி அடுத்த நெசவாளர் காலனியில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது மாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டும் கல் குவாரி மற்றும் கிராவல் குவாரியால் தங்கள் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மக்கள், குவாரி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், காரைக்குடி-மேலூர் வழியாக மதுரைக்கு ரயில் வழித்தடம், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் வழித்தடம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, மத்திய ரயில்வே துறை அமைச்சரை டெல்லியில் சந்திக்க அனுமதி பெற்றுத் தருவதுடன், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார்.