திருப்பூரிலிருந்து வடமாநிலங்கள் நோக்கி செல்லும் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் ஏறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னலாடைத் தொழில் நகரமாக அறியப்படும் திருப்பூரில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் வேலைச் செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாமலே கூட்டம் கூட்டமாக அவர்கள் முண்டியடித்து ஏறினர்.
இதனால் ஆத்திரமடைந்த முன்பதிவு செய்த பயணிகள், டிக்கெட் பரிசோதகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.