சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு-புதுச்சேரி பார்க் கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்டார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உடனடியாகக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகாரைப் பெற காவல்துறை மறுத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
மேலும், பார்க் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் பார்க் கவுன்சில் இதுவரைப் புகார் அளிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாகும், வழக்கறிஞர்களைப் பாதுகாக்க வேண்டிய பார்க் கவுன்சில் தனது கடமையை மறந்துவிட்டதாகவும் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டினர்.