அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சமீப நாட்களில் Al ChatBot-களின் பேச்சைக் கேட்டுக் குழந்தைகள் தற்கொலைச் செய்து கொள்வது உள்ளிட்ட பல விபரீதங்கள் அரங்கேறி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் கலிபோர்னியாவில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை அமல்படுத்த அம்மாகாண ஆளுநர் கவின் நீயுசம் கையொப்பமிட்டுள்ளார்.
அதன்படி 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு முறை ஓய்வு எடுக்க Alert கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீங்கள் பேசுவது ChatBot-இடம்தான் மனிதர்களிடம் இல்லை என்பதையும் ChatBot-கள் நினைவுப்படுத்த வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது.