பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை துணிச்சலுடன் மேற்கொண்ட இந்தியாவுக்குச் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலக நிதி அமைப்பின் அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துகொண்ட கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, இந்தியா மேற்கொண்ட துணிச்சலான பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து உலகப் பொருளாதாரம் மீண்டு வந்துகொண்டிருக்கும் சூழலில், இந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திருத்தப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வரிச் சட்டங்கள் முதல் சர்வதேச அளவிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வரை மிக முக்கியமாக மற்றும் துணிச்சலான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு இருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.