கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல்முறையாகத் தவெக தலைவர் விஜயை சந்தித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு என்.ஆனந்த் பொதுவெளிக்கு வராமலே இருந்தார். இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் நள்ளிரவில் விஜயைச் சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைச் சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது.