அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்த போது இத்தாலி பிரதமர் மெலோனி கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைச் செய்த 20 அம்சத் திட்டத்தை ஒப்புக் கொண்டு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் அதிபர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்கிறேன் எனத் தெரிவித்தார்.
மேலும் அவரை அமைதியின் நாயகன் எனவும் ஷெபாஸ் ஷெரீப் கூறினார். இதனைக் கேட்டதும் இத்தாலி பிரதமர் மெலோனி தனது வாயில் கையை வைத்து சிரிப்பைக் கட்டுப்படுத்தினார்.
இந்தக் காட்சிகள் வெளியான நிலையில், நெட்டிசன்கள் டிரம்ப் மற்றும் ஷெபாஷ் ஷெரீப்பைக் கிண்டலடித்து வருகின்றனர்.